search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்தது
    X

    ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்தது

    • ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெ ட்டிற்கு ஆந்திராவில் இருந்து மட்டும் 5 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வந்தன.
    • இந்த வாரம் வரத்து குறைந்ததன் எதிரொலியாக ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ. 35 வரை விற்பனையாகி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் தாளவாடி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒட்டன் சத்திரம், பெங்களூரு, கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து 8 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு வந்தன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் கேரளா, கர்நாடக மாநிலங்களிலும் மழை தீவிரமாக பெய்து வருகிறது.

    இதன் காரணமாக தக்காளி விளைச்சல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தக்காளி வரத்தும் சரிய தொடங்கியுள்ளது. இதனால் தக்காளி விலை அதிகரித்துள்ளது.

    இன்று ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெ ட்டிற்கு ஆந்திராவில் இருந்து மட்டும் 5 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வந்தன. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

    கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் 15 வரை விற்பனையாகி வந்தது. இந்த வாரம் வரத்து குறைந்ததன் எதிரொலியாக ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ. 35 வரை விற்பனையாகி வருகிறது. இன்னும் சில நாட்கள் இதே நிலைமை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×