search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயிர் கடன் பெற விவசாயிகளுக்கு வயது வரம்பு இல்லை
    X

    பயிர் கடன் பெற விவசாயிகளுக்கு வயது வரம்பு இல்லை

    • பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு வயது உச்ச வரம்பு இல்லை என அறிவிக்கப்பட்டது.
    • மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

    ஈரோடு:

    உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் பெறும் விவசாயி களின் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    தற்போது பெரும்பாலும் விவசாயத்தில் ஈடுபட்டு வருபவர்கள் முதியவர்களாக மட்டுமே இருப்பதால் விவசாயிகள் பெரும்பாலானோர் பயிர் கடன் பெற முடியாத சூழ் நிலை ஏற்பட்டது.

    எனவே பயிர் கடன் பெறுவதற்கு விவசாயிக ளுக்கு வயது வரம்பை தளர்த்த வேண்டும் என விவசாயிகள், விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 6-ந் தேதி சட்டமன்றத்தில் நடைபெற்ற கூட்டுறவு த்துறை மானியக் கோரிக்கை யின் போது கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு வயது உச்ச வரம்பு இல்லை என அறிவிக்கப்பட்டது.

    இந்த உத்தரவை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அனைத்து மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

    Next Story
    ×