என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர் கைது அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2022/09/07/1758295-untitled-6.jpg)
அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர் கைது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பவானி அருகே உள்ள போத்தநாயக்கன் புதூர் பகுதியில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- இதனையடுத்து அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் பிரபுவை கைது செய்தனர்.
பவானி:
பவானி அருகே உள்ள போத்தநாயக்கன் புதூர் பகுதியில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பவானி போலீசார் சென்று சோதனை மேற்கொ ண்டனர். அப்போது போத்தநாயக்கன்புதூர் சுடுகாடு அருகில் உள்ள முட்புதர் பகுதியில் சாக்கு மூட்டையில் விற்பனை செய்ய பிராந்தி மற்றும் பீர் பாட்டில்களை வாலிபர் ஒருவர் வைத்து இருந்தது தெரியவந்தது.
அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஈரோடு சூரம்பட்டி வலசு, பாண்டியன் வீதியை சேர்ந்த பிரபு (25) என்பதும், சமையல் வேலை செய்து வரும் இவர் அனுமதியின்றி மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் பிரபுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.