என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெண் வியாபாரியிடம் ரூ.2.26 லட்சம் ஆன்லைனில் மோசடி
- ஈரோட்டில் ஆன்லைனில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் வியாபாரி இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தினர். அந்த பெண் வியாபாரி பணத்தை செலுத்திய வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்தனர்.
ஈரோடு:
ஈரோட்டை சேர்ந்த பெண் வியாபாரி ஒருவர் மிளகாவை மொத்த விலையில் வாங்குவதற்காக இணையதளம் உதவியை நாடியுள்ளார். அப்போது இணையதளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த போன் நம்பருக்கு அந்த பெண் வியாபாரி போன் செய்துள்ளார்.
அப்போது எதிர்முனையில் பேசியவர்கள் தாங்கள் நிறுவனம் குஜராத்தில் உள்ளது என்றும் மொத்த வியாபாரிகளுக்கு சலுகை விலையில் பொருட்களை அனுப்பி வைத்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய அந்த பெண் வியாபாரி அவர்கள் கூறியபடி ஆயிரம் கிலோ பொருட்கள் வாங்குவதற்காக அவர்கள் கூறிய வங்கி கணக்கில் முன் தொகையாக ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 800-யை செலுத்தியுள்ளார்.
அதன் பின்னர் அவர்கள் கூறியபடி அந்த பெண் வியாபாரிக்கு அவர்கள் பொருட்களை அனுப்பவில்லை.
இது குறித்து அந்த பெண் வியாபாரிகள் கேட்டதற்கு காலம் தாழ்த்தி வந்தனர். அதன்பிறகு செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் - ஆப் என்று வந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் வியாபாரி இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தினர். அந்த பெண் வியாபாரி பணத்தை செலுத்திய வங்கி கணக்கை முதலில் முடக்கினர்.
அதன் பின்னர் அவர் செலுத்திய பணத்தை அந்த வங்கி கணக்கிலிருந்து எடுத்தனர். நேற்று பாதிக்கப்பட்ட பெண்ணை அலுவலகத்திற்கு நேரடியாக வரவழைத்து மோசடியில் அவர் இழந்த ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 800 பணத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைத்தனர்.
இதையடுத்து அந்த பெண் வியாபாரி நன்றி கூறி சென்றார்.