என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கண் தானம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும்
- கண் அறுவை சிகிச்சை பிரிவு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு கண் நோய்க்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- கண் தானம் செய்தால் மற்றவர்களுக்கு பார்வை கொடுக்கலாம். 35 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.
தஞ்சாவூர்:
தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் இன்று உலக கண்ணொ தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு இளங்கலை மாணவர்க ளால் உருவா க்கப்பட்ட கண்ணொளி பற்றிய கண்காட்சிகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.
இந்த கண்காட்சியை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருது துரை, நிலைய மருத்துவ அலுவலர் உஷா தேவி மற்றும் டாக்டர்கள் பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கண்ணொளி பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் பேசும்போது, தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு ஆஸ்பத்திரியில் கண் அறுவை சிகிச்சை பிரிவு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு கண் நோய்க்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாதாந்திர கண்புரை அறுவை சிகிச்சையில் தமிழக அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது. கண் தானம் செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். கண் தானம் செய்தால் மற்றவர்களுக்கு பார்வை கொடுக்கலாம். 35 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் துறை பேராசிரியரும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க மேலாளருமான ஞான செல்வன் தலைமையில் செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் இணை பேராசிரியர் அன்புசெல்வி நன்றி கூறினார்.
முன்னதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
இந்த ஒரு மாத அளவில் கண் புரை அறுவை சிகிச்சையில் டாக்டர்களின் பங்களிப்பில் ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரி மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. கண் தானம் செய்வதை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும். கண் தானம் செய்வது மிகவும் எளிது. உடல் தானம் செய்பவர்கள் கூட கண் தானம் செய்யலாம்.
ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருட்டு போவதாக புகார்கள் வந்துள்ளன. அதனை தடுக்க 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்