search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வசதி
    X

    அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வசதி

    • சேலம் மாவட்டத்தை சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
    • 156 வகையான இ.எஸ்.ஐ., பி.எப், பிடித்தம் செய்யப்படாத தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யலாம்.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுதளம் என்ற ஒரு தரவுதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

    இந்த தரவு தளத்தல் கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டுப்பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், பேக்கிங் செய்வோர், தச்சு வேலை செய்வோர், கல் குவாரி தொழிலாளர்கள், மர ஆலைத்தொழிலாளர்கள், உள்ளூர் கூலித் தொழிலாளர்கள், முடிதிருத்துவோர், தெரு வியாபாரிகள், சிறு வியாபாரிகள், அங்கன்வாடிப்பணியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், பால் வியாபாரிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 156 வகையான இ.எஸ்.ஐ., பி.எப், பிடித்தம் செய்யப்படாத அமைப்புச்சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யலாம்.

    அனைத்து பொது சேவை மையங்களிலும் மற்றும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. https://eshram.gov.in என்ற இணைதளத்தில் தொழிலாளர்கள் சுயமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்துத் தொழிலாளர்களும் இத்தரவுதளத்தின் கீழ் பதிவு செய்ய வழிவகை உண்டு.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×