search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சம்பா நடவு பணியில் விவசாயிகள் மும்முரம்
    X

    சம்பா நடவு பணியில் விவசாயிகள் மும்முரம்

    • சில இடங்களில் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து சாகுபடி செய்தனர்.
    • தொடர்ந்து மழை பெய்வதால் சாம்பா நடவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:-

    மேட்டூர் அணை கடந்த ஜுன் 12-ந் தேதி திறக்கப்பட்டு காவிரி நீர் கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு திறக்கப்பட்டது.

    இதையடுத்து விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் போதுமான தண்ணீர் வராததாலும், போதிய மழை பெய்யாததாலும் குறுவை சாகுபடியை விவசாயிகள் ஒரு சில இடங்களில் மட்டும் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து சாகுபடி செய்தனர்.

    தற்போது சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    முத்துப்பேட்டை தாலுகா தில்லை விளாகம், உதயமார்த்தாண்டபுரம், இடும்பாவனம், தம்பிக்கோட்டை கீழக்காடு, மேலநம்மகுறிச்சி, கோவிலூர், ஜாம்புவானோடை, ஆலங்காடு, உப்பூர் போன்ற பகுதிகளில் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்வதால் முத்துப்பேட்டை பகுதிகளில் சம்பா நடவு பணிக்காக வயல்களில் விவசாயிகள் நாற்று பறிக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

    Next Story
    ×