search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு அழைப்பு
    X

    நெல்லை மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு அழைப்பு

    • தமிழகத்தில் 15 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் தமிழகத்தில் உள்ள 33 மாநில அரசு விதைப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
    • மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களான தங்க சம்பா, கருங்குறுவை மற்றும் ஆத்தூர் கிச்சடி சம்பா போன்ற நெல் ரக விதைகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் டேவிட் டென்னிசன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் 2021-22-ம் ஆண்டு பட்ஜெட் உரையில் அறிவித்தபடி பாரம்பரிய நெல் ரக விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் நடப்பு நிதியாண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

    தமிழகத்தில் 15 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் தமிழகத்தில் உள்ள 33 மாநில அரசு விதைப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து நம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களான தங்க சம்பா, கருங்குறுவை மற்றும் ஆத்தூர் கிச்சடி சம்பா போன்ற நெல் ரக விதைகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விதைகளின் விலையானது ரூ.25 என அரசால் நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்பட உள்ளது.

    அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.12.50 மானிய விலையில் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான 20 கிலோ விதைகள் மட்டும் வழங்கப்படும்.

    ஆர்வமுள்ள விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×