என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
கொள்முதல் நிலையம் முன்பு குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள்.
கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல்லை கொட்டி காத்துக்கிடக்கும் விவசாயிகள்
By
மாலை மலர்24 Oct 2023 3:16 PM IST

- நெல்லை கொட்டி வைத்து விற்க முடியாமல் கடந்த ஒரு வாரமாக காத்து கிடக்கின்றனர்.
- அறுவடை செய்த நெல்லை மழையில் நனையாமல் இருக்க விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இரும்பு தலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை முன்பரு வத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இரும்புதலை அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து விற்க முடியாமல் கடந்த ஒருவார காலமாக காத்து கிடக்கின்றனர். கொள்முதல்நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் பலர் அறுவடை செய்த நெல்லை மழையில் நனையாமல் இருக்க விவசாயிகள் தினசரி சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே கொள்முதல்நி லையத்தை உடனடியாக திறந்து நெல்கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
X