search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்குறுங்குடியில் குரங்குகள் நாசம் செய்த வாழைக்கன்றுகளுக்கு இழப்பீடு வழங்க  வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை
    X

    குரங்கள் நாசம் செய்த வாழைதோட்டம்.

    திருக்குறுங்குடியில் குரங்குகள் நாசம் செய்த வாழைக்கன்றுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை

    • மலையடிபுதூர் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
    • இதுவரை 50-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை குரங்குகள் நாசம் செய்துள்ளன.

    களக்காடு:

    திருக்குறுங்குடியை அடுத்துள்ள மலையடிபுதூர் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

    அங்குள்ள மரங்கள் மற்றும் பொத்தையில் தஞ்சமடைந்துள்ள குரங்குகள் கூட்டம், கூட்டமாக வீடுகளுக்குள் சென்று பொருட்களை நாசம் செய்து வருகின்றன. வீட்டு தோட்டங்களில் வளர்க்கப்படும் கொய்யா, மாதுளை போன்ற மரங்களை ஒடித்து விடுகின்றன. தென்னை மரங்களில் தேங்காய்களை பறித்து வீசுகின்றன.

    மலையடிபுதூரில் உள்ள விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழைகளையும் குரங்குகள் நாசம் செய்து வருகின்றன. நடப்பட்டு 1 மாதமே ஆன வாழைக்கன்றுகளின் குருத்துக்களை குரங்குகள் தின்று நாசம் செய்வதால் விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை குரங்குகள் நாசம் செய்துள்ளன.

    இரவு மற்றும் பகல் நேரங்களிலும் குரங்குகளின் அட்டகாசம் நீடிப்பதால் விவசாயிகள் அவைகளை விரட்ட முடியாமல் தவிக்கின்றனர்.

    எனவே அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குரங்குகள் நாசம் செய்த வாழைக்கன்றுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×