என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் - கலெக்டர் தகவல்
- விவசாயிகள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று பின் மனுக்களை அளிக்க வேண்டும்.
- பல்வேறு விவசாய துறையினர் விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை
(வெள்ளிக்கிழமை ) காலை 10 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நு கர்பொருள் வாணிபக்கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
கூட்டத்தில் கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று பின் மனுக்களை அளிக்க வேண்டும்.
மேலும் விவசாயம் சார்ந்த கருத்துக்களை கோரிக்கைகளாக தெரிவித்து பயன் பெற வேண்டும். கொரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் விவசாய பெருமக்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.