search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரட் கொள்முதல் விலைவீழ்ச்சி கோத்தகிரி விவசாயிகள் கவலை
    X

    கேரட் கொள்முதல் விலைவீழ்ச்சி கோத்தகிரி விவசாயிகள் கவலை

    • தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
    • கடந்த 2 மாதங்களுக்கு முன்புகூட கேரட் கிலோவுக்கு ரூ.70 வரை கொள்முதல் செய்யப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் மலைகாய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

    கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள கேரட் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டது.

    எனவே விவசாயிகள் கேரட்டை முன்கூட்டியே அறுவடை செய்து, காய்கறி கழுவும் மையங்களுக்கு கொண்டு சென்று, பின்னர் மூட்டைகளில் நிரப்பி, காய்கறி மண்டிகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.அங்கு உள்ள காய்கறி மண்டிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கேரட் கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.120 வரை கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்புகூட கேரட் கிலோவுக்கு ரூ.70 வரை கொள்முதல் செய்யப்பட்டது.

    ஆனால் தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் ரூ.13 முதல் ரூ.20வரையும், கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கிலோவுக்கு ரூ.12 முதல் ரூ.18 வரை மட்டுமே கொள்முதல் செய்யபடுகிறது. கேரட் கொள்முதல்விலை வீழ்ச்சியடைந்து உள்ளதால், அதை பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்கள் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×