search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடியில் கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
    X

    கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    வாழப்பாடியில் கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

    • வாழப்பாடியில் உள்ள புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் தலைமையில், விவசாயிகள் கறவை மாடுகளுடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அரசு இலவச காப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், பால் உற்பத்தி விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில், விவசாயிகள் கறவை மாடுகளுடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ 5 உயர்த்தி கொடுக்க வேண்டும்.

    அனைத்து கறவை மாடுகளுக்கும் அரசு இலவச காப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், பால் உற்பத்தி விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆவின் பொது மேலாளர் மற்றும் மாவட்ட வருவாய் ஆய்வாளரான விஜய் பாபு, பால் கூட்டுறவு பதிவாளர் செந்தில்குமார், துணை பொது மேலாளர் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள் பால் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் பணிகளை பார்வையிட்டனர்.

    Next Story
    ×