search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுதானியங்கள் ,காய்கறிகளை பயிரிட விவசாயிகள் முன்வரவேண்டும்:கலெக்டர்  ஷ்ரவன் குமார் அறிவுறுத்தல்
    X

    மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கில் குறுகிய காலத்தில் அதிக வருமானம் தரும் காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த கையேட்டினை மாவட்ட கலெக்டா ஷ்ரவன் குமார் வெளியிட்டார்.

    சிறுதானியங்கள் ,காய்கறிகளை பயிரிட விவசாயிகள் முன்வரவேண்டும்:கலெக்டர் ஷ்ரவன் குமார் அறிவுறுத்தல்

    • தொழில்நுட்பம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கு நடைபெற்றது.
    • சமீப காலங்களில் தக்காளி விலையேற்றத்தை அறிந்திருப்பீர்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், குறுகிய காலத்தில் அதிக வருமானம் தரும் காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த சில ஆண்டுகளாக சரியான அளவீட்டில் மழை பெய்து வருவதால் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கரும்பு, நெல் போன்ற பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் ஒரே பயிரை மட்டும் பயிரிடாமல் பல்வேறு வகையான மாற்றுப் பயிர்களை மாற்றி பயிரிட்டால் அதிக அளவில் லாபம் ஈட்ட முடியும். தற்போது உள்ள வாழ்வியல் சூழ்நிலையில், மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்காக சிறுதானியங்களை, அதிக அளவில் பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும்.

    சமீப காலங்களில் தக்காளி விலையேற்றத்தை அறிந்திருப்பீர்கள், எனவே காய்கறிகளும் பெருமளவில் பயிரிட வேண்டும். இதற்கான ஆலோசனைகளும், சந்தேகங்களையும் வேளாண் விஞ்ஞானிகளிடம் தெரிந்து கொண்டு செயல்படவேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். முன்னதாக வேளாண் தொழில் நுட்பங்கள் அடங்கிய கையேட்டினை வெளியிட்டார். மேலும் வேளாண் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் கருணாநிதி, துணை இயக்குநர் தோட்ட கலை துறை சசிகலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், வாழ வச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கவின்னோ, யசோதா, கார்த்திகேயன், வேளாண்மை துணை இயக்குநர் வேளாண் வணிகம் (பொ) சத்திமூர்த்தி, தோட்டக்கலை உதவி இயக்குநர் முரளி, விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×