என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் அளவோடு பயன்படுத்த வேண்டும்
- ரசாயன பூச்சிக் கொல்லியின் பயன் பாட்டை வெகுவாக குறைக்கலாம்.
- மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கிருஷ்ணகிரி,
பயிர்களில் பூச்சிக் கொல்லி மருந்துகளை அள வோடு பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் கிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
பூச்சி தாக்குதல் கிருஷ்ண கிரி மாவட்டத்தில் நெல், சிறுதானியங்கள், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் காய்கறி பயிர்கள், மா, வாழை உள்ளிட்ட தோட்டக் கலை பயிர்களும் சாகுபடி செய்யப் படுகின்றன. பல்வேறு பூச்சி மற்றும் நோய்கள் பயிர்களை தாக்க வாய்ப்பு உள்ளது.
விவசாயிகள் பூச்சி களையும், நோய்களையும் கட்டுப் படுத்திட வேளாண்மை துறையால் பரிந்துரைக்கப்படும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளான இயற்கை ஒட்டுண்ணிகள், விளக்குப்பொறி, இனக்கவர்ச்சி பொறி, உழவியல் முறைகள், உயிரியல் காரணிகள் ஆகியவற்றை கொண்டு கட்டுப்படுத்துவதின் மூலம் ரசாயன பூச்சிக் கொல்லியின் பயன் பாட்டை வெகுவாக குறைக்கலாம். மேற் குறிப்பிட்ட ஒருங்கி ணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையை கடை பிடிக்காமல் தேவைக்கு அதிகமாக பூச்சி மற்றும் நோய் கொல்லி மருந்துகளை பயன் படுத்துவதின் மூலம் நாம் உண்ணும் உணவுகளிலும், மற்றும் கால்நடை தீவனங்களிலும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் அளவு நிர்ண யிக்கப்பட்ட நஞ்சு அளவை விட அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பிற்காலங்களில் பூச்சி மற்றும நோய்களை கட்டுபடுத்த முடியாமல் மகசூல் இழப்பு ஏற்பட கூடிய சூழ்நிலை உருவாகும் என விஞ்ஞானிகள் தெரிவிக் கின்றனர். எனவே உரிய பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து பூச்சிக் கொல்லி மருந்துகளை அளவோடு பயன் படுத்திட வேண்டும். பூச்சி மருந்துகள் குறித்த தகவல் களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்