என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மாமனை கத்தியால் குத்திய அண்ணன், தம்பி கைது மாமனை கத்தியால் குத்திய அண்ணன், தம்பி கைது](https://media.maalaimalar.com/h-upload/2022/12/26/1812673-010.webp)
கைதான முஸ்தபா, சாதிக் பாஷா இருவரையும் படத்தில் காணலாம்.
மாமனை கத்தியால் குத்திய அண்ணன், தம்பி கைது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தள்ளு வண்டியில் மாட்டிறச்சி வறுவல் கடை நடத்தி வந்தனர்.
- வருவல் கறியை வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்துள்ளனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் தருமபுரி, திருப்பத்தூர் பிரதான சாலையோரம் உள்ள ஏரிக்கரையோரம் மத்தூர் பகுதியை சேர்ந்த ரம்ஜான் மற்றும் அவரது மருமகன் இம்ரான் ஆகிய இருவரும் தள்ளு வண்டியில் மாட்டிறச்சி வறுவல் கடை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த கமால்பாஷா என்பவரது மகன்கள் சாதிக்பாஷா, அவரது தம்பி முஸ்தபா ஆகிய இருவரும் இம்ரானிடம் வருவல் கறியை வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்துள்ளனர்.
இதில் இருவருக்கு மிடையே வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதில் மது போதையில் இருந்த முஸ்தபா ஆத்திரமடைந்து தனது சட்டை பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரம்ஜான் மற்றும் இம்ரானை வயிற்றுப் பகுதியில் குத்தினார். இதில் படுகாயமடைந்த இருவரும் சத்தமிட்டுள்ளனர்.
அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள் கத்தி குத்தில் அடிபட்டு கிடந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய முஸ்தபா, சாதிக் பாஷா இருவரையும் கைது செய்து போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.