என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும்; கலெக்டரிடம், விவசாயிகள் மனு
- பயிர்களுக்கு இலை வழியாக யூரியா உரம் இடும் பணி நடக்கிறது.
- நில அளவை பிரிவில் 8 சர்வேயர் உள்ள இடத்தில் 4 பேர் மட்டுமே உள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
விவசாயி வீரசேனன் அளித்த மனுவில், தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா நெற்பயிர்கள் வளர்ந்து வருகிறது. பயிர்களுக்கு இலை வழியாக யூரியா உரம் இடும் பணி நடக்கிறது.
இந்த சூழ்நிலையில் பல இடங்களில் உரம் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனை உடனடியாக போக்க வேண்டும் என்ற குறிப்பிட்டிருந்தார். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில்,
கூட்டுறவு சங்க ங்களில் உடனடியாக விவசாயிகளுக்கு கடன் மற்றும் உரம் வழங்க வேண்டும், ஒரத்தநாடு நில அளவை பிரிவில் 8 சர்வேயர் உள்ள இடத்தில் 4 பேர் மட்டுமே உள்ளனர்.
இவர்களை இடமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.இதேபோல் ஏராளமான விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.