என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
திசையன்விளை அருகே புனித சூசையப்பர் ஆலய திருவிழா
Byமாலை மலர்30 Jan 2023 2:40 PM IST
- திசையன்விளை அருகே உள்ள காரம் பாடு புனித சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது.
- விழா நாட்களில் ஆலயத்தில் திருப்பலி, பல்வேறு சபைகள் சார்பில் நிகழ்ச்சிகள் நடந்தது.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள காரம் பாடு புனித சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. மன்னார்புரம் பங்குதந்தை எட்வர்ட் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். விழா நாட்களில் ஆலயத்தில் திருப்பலி, பல்வேறு சபைகள் சார்பில் நிகழ்ச்சிகள் நடந்தது.
9-ம் திருவிழா அன்று மாலை ஆராதனையும் சப்பர பவனியும் நடந்தது. 10-ம் திருவிழாவில் சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆசீர், சப்பர பவனி, விளையாட்டு போட்டிகள், அசனம் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்குதந்தை அந்தோணி டக்ளஸ் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
X