search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்பட்டியில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவருக்கு `கவனிப்பு
    X

    டிராக்டர் டிரைவரை தாக்கிய அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்.

    செம்பட்டியில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவருக்கு `கவனிப்பு'

    • அரசு பஸ் டிரைவரும், டிராக்டர் டிரைவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
    • ஆம்புலன்ஸ் வந்த நேரத்தில் சாலையில் பஸ்சை நிறுத்தி இருவரும் அடித்து தாக்கி கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

    செம்பட்டி:

    கூடலூரில் இருந்து கோவைக்கு திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி வழியாக அரசு பஸ் சென்றது. இந்த பஸ் செம்பட்டி பஸ் நிலையம் வந்த போது பாளையங்கோட்டையை சேர்ந்த ஒருவர் டிராக்டரில் வந்தார். அவரை அரசு பஸ் டிரைவர், ஓரமாக மெதுவாக செல்லும்படி கூறியுள்ளார்.

    இதனால், டிராக்டர் டிரைவர் டிராக்டரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, அரசு பஸ் கண்டக்டரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் அரசு பஸ் கண்டக்டருக்கும், டிராக்டர் டிரைவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டது. இதில் டிராக்டர் டிரைவர், அரசு பஸ் கண்டக்டரை தாக்கினார்.

    இதனால் கடும் கோபமடைந்த அரசு பஸ் கண்டக்டர், தனது கேஸ் பேக்கை, அருகில் இருந்த டைம் கீப்பரிடம் கொடுத்துவிட்டு, அந்த டிராக்டர் டிரைவரை சரமாரியாக தாக்கினார். ேமலும் டிராக்டர் டிரைவர் தொடர்ந்து, அரசு பஸ் கண்டக்டரிடம் வாக்குவாத த்தில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தார்.

    அப்போது, அந்த வழியாக திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு நோக்கி ஆம்புலன்ஸ் வந்தது. அந்த நேரத்தில் சாலையில் பஸ்சை நிறுத்தி இருவரும் அடித்து தாக்கி கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×