search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    200-வது ஆண்டு விழாவையொட்டி ஊட்டியில் திரைப்பட விழா தொடக்கம்
    X

    200-வது ஆண்டு விழாவையொட்டி ஊட்டியில் திரைப்பட விழா தொடக்கம்

    • திரைப்படவிழாவில் அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி பங்கேற்றனர்
    • சுற்றுலாத்துறை சார்பில் ரூ.150 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி 200-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியான திரைப்பட விழாவில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து ஆஸ்கார் விருது பெற்ற "தி எலிபெண்ட் விசுபெரர்சு" குறும்ப டத்தினை பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

    இவ்விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா மற்றும் ஊட்டியின் 200-வது ஆண்டினை போற்றும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகள் இணைந்து சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஊட்டி 200 விழாவினை சிறப்பாக கொண்டாடுவதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதன் பேரில், மாவட்ட நிர்வாகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.சுற்றுலா பயணிகளை வருகையினை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. முதலாவதாக கடந்த 6-ந் தேதி அன்று காய்கறி கண்காட்சி தொடங்கப்பட்டு, அதனை தொடர்ந்து புகைப்படக்கண்காட்சி, படகு போட்டி, பழக்காட்சி என ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், கூடலூரில் தோட்டக்கலைத்துறையின் மூலம் தேவாலா பண்ணை யினை ரூ.3 கோடி மதிப்பில் மேம்படுத்தவும், படகு இல்லத்தில் சாகச பூங்கா மற்றும் பைக்காராவில் மிதவை படகு அமைக்கவும், சுற்றுலாத்துறை சார்பில் ரூ.150 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இவ்விழாவில் நீலகிரி எம்.பி. ஆ.ராசா கூறியதா வது:-

    கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சலீவன் அவரால் கண்டறியப்பட்டு கட்டமைக்கப்பட்ட இந்த 200-வது விழாவினை கொண்டாடும் வகையில், இன்றைய தினம் இந்த திரைப்பட விழாவானது நடைபெறுகிறது. தமிழ கத்திற்கு என உள்ள பல்வேறு மொழி, இன, கலாச்சாரங்களில், நீலகிரி மாவட்ட மக்கள் ஒரு பெரும் பங்கினை, தொன்மைகளை பெற்றிருக்கிறார்கள். அவற்றினை நாட்டிற்கு பறைசாற்றுகின்ற வகையில் கொண்டாட வேண்டும் என முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததையொட்டி சென்ற நிதியாண்டில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதேபோன்று திரைப்படம் என்பது மொழி, இனம், சமூகம், சாதி ஒழிப்பு, பெண் உரிமை. மத நல்லிணக்கத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திரைப்படங்கள் எல்லாம் ஊட்டி நகரில் எடுக்கப்பட்டது என்பது இந்த நகரத்திற்கு தனி சிறப்பு ஆகும். எனவே ஊடியில் எடுக்கப்பட்ட மூடுபனி, முள்ளும் மலரும், ஊட்டி வரை உறவு, புதையல் போன்ற பல்வேறு திரைப்படங்களையும் பார்த்து 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த சமூக சம்பவம் சமூக நிலை மற்றும் ஊட்டியின் பங்கு என்ன என்பதனை தெரிந்து கொள்ளவும், ஊட்டியில் பெருமையை தெரிந்து கொள்ளவும் திரைப்படம் உதவும், எனவே மொழியால், இனத்தால், இருக்கின்ற இடம் ஊட்டியினால், நாம் பெருமையடைகிறோம் என்கின்ற உணர்வை, இந்த திரைப்பட விழாவானது நமக்கு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, சுற்றுலாத்துறை அமைச்சர், நீலகிரி எம்.பி. ஆகியோர் "வாக்கத்தான்" குறும்படத்தினை இயக்கிய இயக்குநர்கள் சுரேஷ், பிரவீன் மற்றும் குழுவினரை பாராட்டி பொன்னாடை அணிவித்து, "பிளாஸ்டிக் தடை குறும்படம்", சுற்றுலா பயணிகள் செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதது குறித்த மாவட்ட கலெக்டர் உரையாற்றிய விழிப்புணர்வு குறும்படம், "திஎலிபெண்ட் விசுபெரர்சு" போன்ற குறும்படங்களை பார்வை யிட்டனர்.

    விழாவில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், உதவி வன பாதுகாவலர் தேவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் கருப்புச்சாமி, ஊட்டி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.மனோகரி, வருவாய் கோட்டாட்சியர்கள் துரைசாமி (ஊட்டி, முகம்மது குதுரதுல்லா (கூடலூர்), வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், வட்டாட்சியர்கள் ராஜசேகர் (ஊட்டி), காயத்ரி (கோத்த கிரி) உள்பட அரசுத்துறை அலுவலர்கள் அசெம்பிளி திரையரங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×