என் மலர்
உள்ளூர் செய்திகள்

பட்டாசு குடோனில் போலீசார் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்
- பட்டாசு தயாரிக்கும் இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரனிடம் ஒப்படைத்தனர்.
சுவாமிமலை:
தமிழகத்தில் சமீபத்தில் பட்டாசு குடோனில் ஏற்றபட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து தமிழக காவல் துறை சார்பில் பட்டாசு குடோன் மற்றும் பட்டாசு தயாரிக்கும் இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் முறையாக உரிய அனுமதி பெற்று தொழில் செய்து வருகின்றரா என தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் அதிக அளவில் போலீசார் தீவிரமாக பட்டாசு குடோனில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவ்த் உத்தரவின் படி, திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி தலைமையிலான போலீசார் நாச்சியார்கோவில் அருகே உள்ள நாகரசம்பேட்டை பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் முறையாக அனுமதி பெறாமல் ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் 204 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடந்து போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரனிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக நாச்சியார் கோவில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.






