search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளத்தில் விழுந்த பசுமாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்
    X

    பள்ளத்தில் விழுந்த பசுமாடு பத்திரமாக மீட்கப்பட்டது.

    பள்ளத்தில் விழுந்த பசுமாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

    • அங்கு மூடப்படாமல் இருந்த 8 அடி ஆழ பள்ளத்தில் திடீரென பசு மாடு தவறி விழுந்தது.
    • 30 நிமிடம் போராட்டத்திற்கு பின்னர் பசுமாட்டை பத்திரமாக வெளியே மீட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கொண்டி ராஜபாளையம் பகுதியில் பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு மூடப்படாமல் இருந்த 8 அடி ஆழ பள்ளத்தில் திடீரென பசு மாடு தவறி விழுந்தது.

    மேலே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

    இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் உதவி மாவட்ட அலுவலர் பழ. தியாகராஜ், சிறப்பு நிலைய அலுவலர் ரவி, தீயணைப்பு வீரர் பிரபாகரன் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் பசுமாடு மீது கயிறை போட்டு கட்டினர்.

    30 நிமிடம் போராட்டத்திற்கு பின்னர் பசுமாட்டை பத்திரமாக வெளியே மீட்டனர்.

    Next Story
    ×