search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலுதவி செயல்விளக்க முகாம்
    X

    பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    முதலுதவி செயல்விளக்க முகாம்

    • பெரிய விபத்துக்களில் இருந்து மக்களை மீட்பது எப்படி?
    • தீ விபத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நெடுஞ்சா லை துறை மற்றும் வட்டார மோட்டார் வாகன போக்குவரத்து துறை சார்பில் சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு முதலுதவி செயல் விளக்கம் முகாம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் பாலசுப்பி ரமணியன் தலைமை தாங்கினார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார், நெடுஞ்சாலைதுறை கோட்ட உதவி செயற் பொறியாளர் இந்திரன், உதவி காவல் ஆய்வாளர் முகிலரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெல்ஸ்பன் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு அலுவலர் ஜூலியஸ் தூய மணி வரவேற்று பேசினார். வெல்ஸ்பன் நிறுவனத்தின் மூத்த மேலாளர் கோபிராஜ் மற்றும் பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.

    முகாமில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் கிருபாகரன் தலைமையில், ரெட் கிராஸ் தலைமை பயிற்சியாளர் பெஞ்ஜமின் முதல் உதவி குறித்து செயல்முறை விளக்கத்தை பொது மக்களுக்கு செய்துகா ன்பித்தனர். விபத்து ஏற்பட்டு கை, கால் முறிவு, மரணம் தருவாயில் காப்பாற்றுவது, பெரிய விபத்துக்கள் இருந்து மீட்பது, தீ விபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது, பின்னர் சிகிச்சை முறை அளிப்பது குறித்தும் முகாமில் 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு முதலுதவியை செயல்முறை விளக்கத்தை கேட்டும், பார்த்தும் தெரிந்து கொண்டனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மக்கள் தொடர்பாளர் டிரைவிங் சென்டர் கார்த்தி ஒருங்கிணைத்தார்.

    Next Story
    ×