search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாவட்டத்தில் முதன்முறையாக நாய்கள் கண்காட்சி
    X

    நாய்கள் கண்காட்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    தஞ்சை மாவட்டத்தில் முதன்முறையாக நாய்கள் கண்காட்சி

    • நாய்கள் பராமரிக்கப்படும் விதம், உணவு முறைகள் குறித்து அதன் உரிமையாளர்களிடம் கேட்டு அறிந்தார்.
    • இதில் நாய்களின் அணிவகுப்பு, நடை உள்ளிட்ட பலவற்றை நாய்கள் நிகழ்த்தி காட்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக்கோட்டையில் உள்ள மிருகவதை தடுப்பு சங்க அலுவலக வளாகத்தில் இன்று நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. மாவட்டத்திலேயே முதன் முறையாக நடந்த நாய்கள் கண்காட்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    இதில் தஞ்சை மாவட்டம் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகையான நாய்களை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்தனர். இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அமைப்பில் நாய்களை நிறுத்தி வைத்திருந்தனர். அருகிலே அதற்கு தேவையான தண்ணீர், உணவு பொருட்களும் இருந்தது.

    கண்காட்சியில் இடம்–பெற்று இருந்த ஒவ்வொரு நாய்களையும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார். நாய்கள் பராமரிக்கப்படும் விதம், உணவு முறைகள் குறித்து அதன் உரிமையாளர்களிடம் கேட்டு அறிந்தார்.

    மேலும் இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான அரிய உயிரினங்கள், நாய்கள் உண்ணும் உணவுப்–பொருட்கள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அவற்றையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    தொடர்ந்து போலீசாரின் நாய்கள் அணிவகுப்பு கண்காட்சி நடைபெற்றது. பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டியது. தொடர்ந்து கண்காட்சி நடந்து வருகிறது. இதனை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

    தொடர்ந்து இன்று மாலை நாய்கள் கண்காட்சி நடைபெறும். இதில் நாய்களின் அணிவகுப்பு, நடை உள்ளிட்ட பலவற்றை நாய்கள் நிகழ்த்தி காட்டும். மேலும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளையும் நடத்திக் காட்டும். சிறந்த நாய் வகைகள் தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். மேலும் ஆறுதல் பரிசும் வழங்கப்படும்.

    Next Story
    ×