என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![முதன்முறையாக சர்வதேச விதிகளுடன் சிறுவர்களுக்கான கால்பந்தாட்ட லீக் போட்டிகள் - பாளை வ.உ.சி மைதானத்தில் இன்று தொடங்கியது முதன்முறையாக சர்வதேச விதிகளுடன் சிறுவர்களுக்கான கால்பந்தாட்ட லீக் போட்டிகள் - பாளை வ.உ.சி மைதானத்தில் இன்று தொடங்கியது](https://media.maalaimalar.com/h-upload/2022/11/12/1790859-foot.jpg)
கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்று விளையாடிய சிறுவர்களை படத்தில் காணலாம்.
முதன்முறையாக சர்வதேச விதிகளுடன் சிறுவர்களுக்கான கால்பந்தாட்ட லீக் போட்டிகள் - பாளை வ.உ.சி மைதானத்தில் இன்று தொடங்கியது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நெல்லை மாவட்டத்தில் முதன்முறையாக சர்வதேச கால்பந்தாட்ட விதிகளுடன் சிறுவர்களுக்கான லீக் போட்டிகள் பாளையில் இன்று தொடங்கியது.
- போட்டியில் ஆண்கள் பிரிவில் 24 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 30 அணிகள் பங்கேற்று உள்ளன.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் முதன்முறையாக சர்வதேச கால்பந்தாட்ட விதிகளுடன் சிறுவர்களுக்கான லீக் போட்டிகள் பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று தொடங்கியது.
30 அணிகள்
மாவட்ட கால்பந்தாட்ட கழகம் சார்பில் வ.உ.சி. உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 24 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 30 அணிகள் பங்கேற்று உள்ளன.
நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான அணியினர் இதில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அணிக்கும் தலா 8 பேர் வீதம் 240 பேர் பங்கேற்றனர்.
12 வயதுக்கு குறைவான பெண்கள், 10 வயதிற்கு குறைவான ஆண்கள், 10 முதல் 12 வயதிற்குள்ளான ஆண் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. நாளை வரை போட்டிகள் நடைபெற உள்ளது.
நாளை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு பரிசு வழங்க உள்ளார்.