search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு
    X

    உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு

    • வஞ்சிரம் ரூ.850க்கு விற்பனையானது.
    • அதிகளவு மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கோவை,

    கோவை உக்கடத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இந்த மீன் மார்க்கெட்டிற்கு ராமேஸ்வரம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து அதிகளவு மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கோவை மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்தவர்கள் மீன் மார்க்கெட்டிற்கு வந்து தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி செல்கின்றனர். இதனால் எப்போதும் மீன் மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    குறிப்பாக வார விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிகமான மக்கள் மீன் வாங்குவதற்காக மார்க்கெட்டிற்கு வருவார்கள். இதனால் அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்படும்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம், கூட்டமாக குவியத் தொடங்கினர். அவர்கள் மார்க்கெட்டில் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர்.

    வெயில் காலம் தொடங்கி உள்ளதால் தற்போது மீன்கள் வரத்து சற்று குறைவாக உள்ளது. இதன் காரணமாக உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது.

    கடந்த மாதம் ரூ.750க்கு விற்பனையான வஞ்சிரம் மீன் விலை ரூ.100 உயர்ந்து கிலோ ரூ.850க்கு விற்பனையாகிறது.

    இன்று உக்கடம் மீன்மார்க்கெட்டில் விற்பனையாகும் மீன்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

    அயிரை மீன்-ரூ.100, விலா-ரூ.450, வஞ்சிரம்-ரூ.850, மத்தி-ரூ.140, வாளை-ரூ.800, ஊளி-ரூ.400, இறால்-ரூ.500, பாறை-ரூ.400, நண்டு-ரூ.700, கிழங்கான்-ரூ.150க்கு விற்பனையாகியது.

    இதுகுறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறும் போது, தற்போது வெயில் காலம் தொடங்கி விட்டதால் மீன் பிடிப்பது குறைந்து விடும். இதனால் மார்க்கெட்டிற்கும் வரத்து சற்று குறைந்து வருகிறது. இதனால் மீன்கள் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது என தெரிவித்தார்.

    Next Story
    ×