என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூரில் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் சென்ற மீனவர்கள்
- கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வந்த நிலையில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது.
- பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மீன்வளத்துறையினர் அறிவுறுத்தினர்.
கடலூர்:
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. இந்த புயலானது வருகிற 5-ந் தேதி முற்பகலில் நெல்லூர் - மசூலிப்ப ட்டினம் இடையே புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வந்த நிலையில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது.இதன் காரணமாக மீனவ ர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தொடர்ந்து புயல் கரையை கடக்கும் நிலையில் காற்றின் வேகம் அதிகரிக்கும் . கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கடலூர் தாழ ங்குடா, தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு உட்பட மாவட்டத்தின் கரையோரங்களில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்க ளில் கரையோரங்க ளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைபர் படகுகள், வலைகள் கட்டு மரங்கள் உள்ளி ட்டவைகள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மீன்வளத்துறையினர் அறிவுறுத்தினர். இதையடுத்துகடலூர் தாழங்குடா மீனவர் கிராமத்தில் படகுகளை டிராக்டர் மூலம் கட்டி மேடான பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தினார்கள். மேலும் மீன்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.