என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
- ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் வசிக்கும் மலையாளிகள் அத்தப்பூ கோலமிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்
- கோவையில் மல்லி ரூ.800க்கு விற்பனையாகிறது.
கோவை,
கோவை மாவட்டத்தில் பூ மார்க்கெட், மேட்டுப்பா–ளையம், வால்பாறை, தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலர்ச்சந்தைகள் இயங்கி வருகின்றன.
இங்கு உள்ளூர் விவசாயிகள் சாகுபடி செய்த பூக்களை விற்பனைக்கு கெர்ண்டு வருகின்றனர். மேலும் வெளியூர் மாநிலம்-மார்க்கெட்டுகளில் இருந்து பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் வசிக்கும் மலையாளிகள் அத்தப்பூ கோலமிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் கல்லூரிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பூக்கோலத்தை பார்க்க முடிகிறது.
கோவை மற்றும் பல்வேறு பகுதிகளில் தற்போது வறண்ட வானிலை நிலவுகிறது. போதியஅளவில் மழை இல்லை. எனவே அங்கு பூக்களின் விளைச்சல் குறைந்து உள்ளது.
மேலும் கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன்கணக்கில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. எனவே கோவைக்கு மலர்வரத்து குறைந்து உள்ளது.
இதன்காரணமாக கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. அங்கு தற்போது ஒரு கிலோ மல்லி ரூ.800க்கு விற்கப்படுகிறது. அதேபோல ஜாதி மல்லி ரூ.400-க்கு விற்பனை–யாகிறது. இருந்தபோதிலும் ஓணம் பண்டிகை என்பதால் பொதுமக்கள் விலைஉயர்வு பற்றி கவலைப்படாமல் பூக்களை கிலோக்கணக்கில் வாங்கி செல்கின்றனர்.
கோவை பூ மார்க்கெட்டில் விற்பனை–யாகும் பூக்களின் விவரம் (கிலோவுக்கு): செவ்வந்தி-160, செண்டு மல்லி-50, சம்பங்கி-120, அரளி-120, ஒரு கட்டு மருகு-10, வாடாமல்லி-80, ரோஜா-240, மரிக்கொழுந்து-30, துளசி-40, கலர் செவ்வந்தி-240, வெள்ளை செவ்வந்தி-200, மஞ்சள் செவ்வந்தி-100, ஜாதிப்பூ-400, கோழிக்கொண்டை-100, ஒரு தாமரைப்பூ-20, முல்லை-400.
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், கோவை மலர்ச்சந்தைக்கு பூக்களின் வரத்து போதிய அளவில் இல்லை. உற்பத்தியும் சற்று குறைந்து உள்ளது. ஓணம் பண்டிகைக்காக பெருமளவில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
எனவே கோவை மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை உயர்ந்து உள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை முடிந்தபிறகு கோவை மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை குறைய வாய்ப்பு உண்டு என்று தெரிவித்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்