search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் பண்டிகையையொட்டி சேலத்தில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்வு
    X

    பொங்கல் பண்டிகையையொட்டி சேலத்தில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்வு

    • பொங்கல் பண்டிகை வருகிற 15- ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தேவை அதிகரித்து, சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
    • கடந்த வாரம் மல்லிகை ஒரு கிலோ ரூ.1200, ரூ.1400, ரூ.1600 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.ஊ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பொங்கல் பண்டிகை வருகிற 15- ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தேவை அதிகரித்து, சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

    கடந்த வாரம் மல்லிகை ஒரு கிலோ ரூ.1200, ரூ.1400, ரூ.1600 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக மல்லிகை பூ கிலோ இன்று ரூ.2000- க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மற்ற பூக்களும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்கள் இருக்கும் நிலையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது குறித்து வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் ( 1 கிலோ கணக்கில் ) வருமாறு :-

    மல்லிகை - ரூ.2000, முல்லை - ரூ.2000, ஜாதி மல்லி - ரூ.1000, காக்கட்டான் - ரூ.1000, கலர் காக்கட்டான் - ரூ.1000, மலை காக்கட்டான் - ரூ.900, சி.நந்தியா வட்டம் - ரூ.150, சம்பங்கி - ரூ.100, சாதா சம்பங்கி - ரூ.100, அரளி - ரூ.360, வெள்ளை அரளி - ரூ.360, மஞ்சள் அரளி - ரூ.360, செவ்வரளி - ரூ.400, ஐ.செவ்வரளி - ரூ.400, நந்தியா வட்டம் - ரூ.150.

    Next Story
    ×