என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
பக்தர்களால் கொண்டுவரப்பட்ட பூக்கள் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காத்தாயி அம்மன்.
கோவிலூர் காத்தாயி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
By
மாலை மலர்19 July 2023 3:47 PM IST

- சிறப்பு அலங்காரங்கள் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறும்.
- பல்வேறு வகையான பூக்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகில் உள்ள கோவிலூர் நெல்லித்தோப்பு காத்தாயி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறும். அதன்படி நேற்று ஆடி மாதத்தின் முதல் செவ்வாய் கிழமையை முன்னிட்டு காத்தாயி அம்மனுக்கு பூச்சொரிதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் நூற்று க்கணக்கான பக்தர்கள் கொண்டு வந்த பல்வேறு வகையான பூக்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தப்பட்டது. பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
X