என் மலர்
உள்ளூர் செய்திகள்

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்திய காட்சி.
சினிமா தியேட்டரில் உணவு அதிகாரிகள் திடீர் சோதனை
- சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் திரையரங்கில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாக ஆன்லைன் வாயிலாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் வந்தது.
- இதையடுத்து தரமற்ற குளிர்பானங்கள், பிஸ்கெட்டுகளை உணவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம்:
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதையடுத்து அந்த படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் காலை முதலே ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் திரையரங்கில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாக ஆன்லைன் வாயிலாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் வந்தது.
இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் உத்தரவின் பேரில் வட்டார அலுவலர் சிவலிங்கம் தலைமையிலான குழுவினர் தியேட்டரில் இன்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகள், பூச்சி விழுந்த கெட்டுப்போன பால், குளிர்பானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை எடுத்து லேபல்கள் இல்லாத ரோஸ் மில்க் 250 மில்லி லிட்டர் அளவு கொண்ட 94 பாட்டில்கள், கோல்ட் காபி 250 மில்லி லிட்டர் எடை கொண்ட 56 பாட்டில்கள்,250 கிராம் பிஸ்கட் 9 பாக்கெட் இவை அனைத்தும் லேபுள்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் 5 லிட்டர் பால் குளிர்சாதன பெட்டியில் இருந்தது .இந்த பால் கெட்டுப் போனதாக கூறப்படுகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.இது குறித்து கேண்டீன் மீது வழக்கு தொடரப்படும் என்றும் மேலும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு துறைஅதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், திரையரங்க உரிமையாளருக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.






