search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள்
    X

    அமைச்சர் சுப்ரமணியனிடம் மனு அளித்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள்.

    அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள்

    • குறைந்தபட்சம் 3 கட்ட பதவி உயர்வு பெறுவது அவர்களுடைய பணித்தன்மையில் மாற்றத்தை உருவாக்கி, அவர்களுக்கான மனச்சோர்வை நீக்குவதாகவும் இருக்கும்.
    • உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி வழங்கிட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறப்புவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அ.தி.அன்பழகன், மாநில துணைத் தலைவர் பி.நல்லத்தம்பி மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

    அதில் 5.8.11 முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி தமிழகத்தில், உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் கீழ், உணவு பாதுகாப்பு பிரிவில், உணவு பாதுகாப்பு அலுவலர்களாக நாங்கள் பணிபுந்து வருகிறோம்.

    ஒவ்வொரு அரசு ஊழியரும் தம்முடைய பணிக்காலத்தில் குறைந்த பட்சம் 3 கட்ட பதவி உயர்வு பெறுவது, அவர்களுடைய பணித் தன்மையில் மாற்றத்தை உருவாக்கி, அவர்களுக்கான மனச்சோர்வை நீக்குவ தாகவும் இருக்கும்.

    இது குறித்து தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் 5.4.22 அன்று பங்கேற்று சிறப்புரையாற்றிய அமைச்சர் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதிவு உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமான கோரிக்கை.

    இது குறித்து அரசு பரிசீலித்து, விரைவில் தக்க முடிவெடுத்து, பதவி உயர்வு வழங்கும் " என்று உறுதியளித்தார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எந்தவொரு பதவி உயர்வும் இல்லாமல் பணியாற்றி, அரசுப் பணியை நிறைவுசெ ய்யவுள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு, உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி, அவற்றை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் முதன்மைச் செயல் அலுவலர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலா ளர் ஆகியோர் பரிந்துரை ப்படியும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்ட விதிகளின்படியும், பல்வேறு மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது போலவும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி வழங்கிட வேண்டும்.

    உணவு கலப்பட தடுப்புச் சட்டம் 1954-ன்படி உணவு ஆய்வாளர் பயிற்சி முடித்து, உணவு ஆய்வாளராக பணியாற்றி, பின்னர் 5.8.2011 முதல் நடைமுறைக்கு வந்துள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பயிற்சியும் பெற்று, உணவு பாதுகாப்பு அலுவலர்களாக கடந்த 11 ஆண்டுகள் பணியை முடித்துள்ளோம்.

    உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளின்படி உரிய தகுதிகள் பெற்றிருந்தும் கடந்த காலத்தில் எதிர்பார்ப்பை நிறைவேற்றாததால் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கப்படாமல் இருந்ததை மாற்றி பணிப் பாதுகாப்பு உத்தரவை வழங்கிய அமைச்சர் எந்தவொரு பதவி உயர்வும் இல்லாமல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அரசுப் பணியை நிறைவு செய்யும் நிலையை போக்கி, உரிய பதவி உயர்வு வாய்ப்புக்களை உருவாக்கி, வழங்கிட வேண்டும்

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

    .நாகைமாலி எம்.எல்.ஏ உணவுபாதுகாப்பு அலுவலர்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து உரிய உத்தரவுகளை வழங்க அமைச்சரை கேட்டுக்கொண்டார்.

    Next Story
    ×