search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனம்
    X

    நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனத்தை கலெக்டர் ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

    தென்காசி மாவட்டத்தில் நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனம்

    • இந்த வாகனம் உணவு பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வினை பொதுமக்களிடம் ஏற்படுத்த உள்ளது.
    • எளிய பரிசோதனை மூலம் உணவு பொருட்களின் தரம் கண்டறிப்படும்.

    தென்காசி:

    நடமாடும் உணவு பகுப்பாய்வகம் எனப்படும் வாகனம் தமிழ்நாடு அரசால் உணவு பாதுகாப்பு துறை யின்கீழ் பாளை, தஞ்சாவூர், சேலம், கோவை பகுதிகளில் இயங்கும் உணவு பகுப்பாய்வகங்களுக்கு கடந்த ஜனவரி மாதம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    பொதுமக்களிடம் விழிப்புணர்வு

    இந்த வாகனமானது உணவு பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வினை பொதுமக்களிடம் ஏற்படுத்த உள்ளது. இதில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையானது அவர்களிடையே நல்ல சுகாதாரமான சத்தான உணவினை உட்கொள்ள ஒரு தூண்டுகோலாக அமை யும்.

    இந்த வாகனம் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்ட பயன்பாட்டிற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

    கலெக்டர் தொடங்கி வைத்தார்

    இந்நிலையில் நேற்று முதல் ஒரு மாதத்திற்கு தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் ரவிச் சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பொதுமக்கள், வியா பாரிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மூலம் பரிசோதனைக்காக பெறப்படும் உணவுப் பொருட்கள் இவ்வாகனத்தில் மேற்கொள்ளப்படும் எளிய பரிசோதனை மூலம் அப்பொருட்களின் தரம் கண்டறிப்படும்.

    பாதுகாப்பு அதிகாரிகள்

    மேலும் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலமாக பள்ளி- கல்லுாரி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

    இதேபோல் சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணி யாளர்கள் இவ்வாகனத்தை பயன்படுத்தி, அவர்களது பகுதியில் மக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள் வார்கள்.

    உணவு பரிசோதனை

    இவ்வாகனத்தில் உணவு பரிசோதனையானது முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. இவ்வாய்ப்பினை பொது மக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லுாரி மாண வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    தொடக்க விழா நிகழ்ச்சி யில் மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாது காப்புத்துறை) டாக்டர். சசிதீபா, உணவு பாது காப்புத்துறை அலுவலர்கள் மகாராஜா, செல்வராஜ், முத்துராஜா, நாகசுப்பிர மணியன், முகமது அப்துல் ஹக்கிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×