என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் கால்பந்து போட்டி
- பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
- போட்டியில் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 8 அணிகளாக கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகர ஜெயலலிதா பேரவை சார்பில் அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
போட்டிக்கு நகர செயலாளர் விஜய பாண்டியன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி கால்பந்து கழக செயலாளர் தேன் ராஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
இப்போட்டியில் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 8 அணிகளாக கலந்து கொண்டனர். இறுதிப்போட்டியில் நாடார் மேல்நிலைப்பள்ளி மற்றும் வ.உ.சி. அரசு பள்ளி மோதியதில் வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றனர். நாடார் மேல்நிலைப்பள்ளி 2-ம் பரிசை பெற்றனர். 3-வது பரிசை காமநாயக்கன்பட்டி அரசு பள்ளியும், 4-வது பரிசினை லட்சுமி மேல்நிலைப்பள்ளி வீரர்களும் பெற்றனர்.
வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசினை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. வழங்கினார். 2-வது பரிசினை நகர் மன்ற உறுப்பினர் கவியரசன் வழங்கினார். 3-வது பரிசினை ஒன்றிய செயலாளர் அன்புராஜ் வழங்கினார். 4-வது பரிசினை நகர அவைத்தலைவர் அப்பாசாமி வழங்கினார். சிறப்பு பரிசுகளை நகர மன்ற உறுப்பினர் வள்ளியம்மாள், மாரியப்பன், மாவட்ட பிரதிநிதி பழனி குமார், நகர ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் சுப்புலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் இந்திரன், வார்டு செயலாளர்கள் ரமேஷ், சிங்கராஜ் ஆகியோர் வழங்கினர். நகர ஜெயலலிதா பேரவை பொருளாளர் விக்னேஷ் நன்றி கூறினார்.