என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேம்பால பணிக்காக உக்கடத்தில் 20-ந் தேதி மின்தடை
- காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
- அரசு மருத்துவமனை, உக்கடம் பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது.
கோவை,
கோவை மாவட்டத்தில் வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக சில இடங்களில் மின் தடை செய்யப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
முத்துக்கவுண்டன் புதூர் துணை மின் நிலையத்தில் வருகிற 20-ந் தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதால் அங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி நீலாம்பூர், அண்ணா நகர், லட்சுமி நகர், குளத்தூர், முத்துக்கவுண்டன் புதூர் ரோடு, பைபாஸ் ரோடு ஒரு பகுதி, குரும்ப பாளையம் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
உக்கடம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு 20-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி வெரைட்டி ஹால் ரோடு பகுதி, டவுன்ஹால் பகுதி, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதிகள், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோடு, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர் மற்றும் டாக்டர் முனிசாமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ஸ்டேட் பேங்க் ரோடு, கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் பகுதிகள், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை, உக்கடம் பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது.
நெடுஞ்சாலைத்துறை மூலம் உக்கடத்தில் நடைபெறும் மேம்பால பணிகள் விரைவாக முடிக்கும் பொருட்டு உயர் அழுத்த மின் கோபுரம் மற்றும் மின் பாதைகளை அகற்றி புதியதாக அமைக்கப்பட்டு உள்ள 110 கி.வோ. புதைவட கேபிள் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சூலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு 20-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்பட உள்ளது. சூலூர், டி.எம். நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ். நகர், கண்ணம் பாளையம், காங்கேயம் பாளையம், ராவத்தூர் பகுதிகளில் அன்று மின் தடை செய்யப்பட உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்