search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போட்டு கொள்ள கிருஷ்ணகிரி கலெக்டர் அறிவுரை
    X

    செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போட்டு கொள்ள கிருஷ்ணகிரி கலெக்டர் அறிவுரை

    • இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
    • தடுப்பு முறைகளையும், சிகிச்சைகளையும் மேற்கொள்வதால் வெறிநோயை 100 சதவிகிதம் ஒழித்து விடலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் கட்டிகானப்பள்ளி ஊராட்சி கீழ்புதூர் வட்டார வள மைய கல்வி விளையாட்டு வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

    இதை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்து, கால்நடை வளர்ப்போருக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

    கால்நடை வளர்ப்போர், செல்லப்பிராணிகள் வளர்ப்போர் மற்றும் பொதுமக்களுக்கு வெறி நோயினை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மற்றும் ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா சார்பாக இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    வெறிநோய்த் தடுப்பு நாய் வளர்ப்போரின் பொறுப்புணர்வில் தான் ஆரம்பிக்கிறது. அனைத்து நாய்களுக்கும் வருடந்தோறும் வெறிநோய் தடுப்பூசி போட வேண்டும். கால்நடை மருத்துவர் அறிவுரையில் இதை ஒரு சமுதாயக் கடமையாகச் செய்ய வெண்டும். தடுப்பு முறைகளையும், சிகிச்சைகளையும் மேற்கொள்வதால் வெறிநோயை 100 சதவிகிதம் ஒழித்து விடலாம்.

    எனவே பொதுமக்கள், தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி போட்டுக்கொண்டு வெறிநோய் தடுப்பது பற்றிய விழிப்புணர்வு ஆலோசனைகள் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×