search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் 100 அடி உயர தி.மு.க. கொடி கம்பம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா
    X

    அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    பாவூர்சத்திரத்தில் 100 அடி உயர தி.மு.க. கொடி கம்பம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அறிவாலயம் அமைக்கப்பட உள்ளது.
    • பணிகளை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே கே.டி.சி. நகர் பகுதியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அறிவாலயம் அமைக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் 100 அடி உயர திமுக கொடி கம்பம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு தலைமை ஏற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், செயற்குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, ஆறுமுக சாமி,சேக் தாவூது, மாவட்ட துணை செயலாளர்கள் தமிழ்ச்செல்வன்,கென்னடி கனிமொழி,பொருளாளர் ஷெரீப், பொதுக்குழு உறுப்பி னர்கள் ரஹீம்,சாமிதுரை, ரவிச்சந்திரன் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை அனைவரையும் வரவேற்றார்.ஒன்றிய செயலாளர்கள் சிவன் பாண்டியன் அழகுசுந்தரம் ரவிசங்கர் சுந்தர பாண்டியபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் பண்டாரம், செல்வகுமார், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன், கீழ போர் ஒன்றிய குழு தலைவர் காவேரி, அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேலு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×