search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜவளகிரி வனப்பகுதியில் மயில், காட்டுபன்றியை வேட்டையாடிய 4 பேர் சிக்கினர்
    X

    ஜவளகிரி வனப்பகுதியில் மயில், காட்டுபன்றியை வேட்டையாடிய 4 பேர் சிக்கினர்

    • வேட்டை தடுப்பு காவலர்கள் தளி அருகே ஜவளகிரி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 2 பேரையும் வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவளகிரி வனப்பகுதிகளில் காட்டுப்பன்றி, மான், மயில், யானைகள் அதிக அளவில் உள்ளன. இவை தண்ணீர், உணவு தேடி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக யானைகள் தக்காளி உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன் தலைமையில் வனவர் தேவநாதன், வனகாப்பாளர் மகா விஷ்ணு மற்றும் வனகாவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று முன்தினம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கம்பந்தூர் கிராமம் அருகே 2 பேர் காட்டு பன்றி கறியை பங்குபோட்டு கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்து றையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் அதேபகுதியை சேர்ந்த கோவிந்தன் (வயது 60), சதீஷ் (22) என்பதும், காட்டுப்பன்றியை வேட்டையாடி கறியை பங்கு போட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஜவளகிரி வனச்சரக அலுவலர் முரளிதரன் தலைமையில் வனவர்கள் ரமேஷ், ஆனந்த், வனகாப்பா ளர்கள் கோவிந்தன், கதிர வன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தளி அருகே ஜவளகிரி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது 2 பேர் மயிலை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜான்சன்லுகன் (வயது26), சதுகான்லுகன் (28) என்பதும், தனியார் விவசாய பண்ணையில் தங்கி கூலி தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர்கள் இறைச்சிக்காக மயில்களை வேட்டையாடியது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×