search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலை வாங்கி தருவதாக ஆசிரியரிடம் ரூ.4 லட்சம் மோசடி- நைஜீரிய வாலிபருக்கு சிறை
    X

    கோப்பு படம்

    வேலை வாங்கி தருவதாக ஆசிரியரிடம் ரூ.4 லட்சம் மோசடி- நைஜீரிய வாலிபருக்கு சிறை

    • மோசடி செய்த நைஜீரிய வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு கைது செய்தனர்.
    • இவ்வழக்கில் நைஜீரிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    திண்டுக்கல்:

    நிலக்கோட்டை அருகே பள்ளபட்டிைய சேர்ந்தவர் வெங்கடாஜலபதி(45). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதனால் வெளிநாட்டில் வேலை குறித்து இணையதளத்தில் தேடினார்.

    அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு லிங்க் வந்தது. அதை பின்பற்றிய வெங்கடா ஜலபதி எதிர்முனையில் பேசிய நபர் கனடாவில் வேலை உள்ளது என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய வெங்கடாஜலபதி அவர் கூறிய வங்கி கணக்கில் ரூ.4 லட்சத்து 4 ஆயிரத்தை செலுத்தினார்.

    ஆனால் அதன்பின்னர் வேலை குறித்து எந்த தகவலும் இல்லை. மேலும் அந்த நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வெங்கடாஜலபதி திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் வெங்கடாஜலபதியிடம் போனில் பேசியது நைஜீரியாவை சேர்ந்த உச்சண்ணா கிறிஸ்டியன்(45) என தெரியவந்தது.

    ஈேராடு மாவட்டம் பெருந்துறையில் பதுங்கி யிருந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் ேஜ.எம்.1 கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா மோசடி செய்த வாலிபர் உச்சண்ணா கிறிஸ்டியனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    Next Story
    ×