என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்- எம்.எல்.ஏ. வழங்கினார்
- 146 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
- சைக்கிள் பெற்றுக்கொண்ட மாணவிகளுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதாதனசேகர் வரவேற்றார்.
பள்ளி தலைமை ஆசிரியை இந்திராகாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 146 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.
பின்னர் சைக்கிள் பெற்றுக்கொண்ட மாணவிகளுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டார்.
இந்த விழாவில் தி.மு.க ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சி சுந்தரம் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.






