search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம்- மேயர் தொடங்கி வைத்தார்
    X

    கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாமை மேயர் சண். ராமநாதன் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை பார்வையிட்டார்.

    கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம்- மேயர் தொடங்கி வைத்தார்

    • நரம்பியல், சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை.
    • ஆங்கில மாதம் கடைசி சனிக்கிழமைகளில் கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம் நடைபெறும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் ஆகியோர் இணைந்து நடத்தும் கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம் இன்று தஞ்சை மானம்புசாவடி கிருஷ்ணன் கோவில் முதல் தெரு ஸ்ரீஸ்வாம் நர்சரி பள்ளியில் தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சிக்கு 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் தலைமை தாங்கினார். முகாமை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மங்கள தீபம் ஏற்றினார்.

    சௌராஷ்ட்ர கல்வி நிதி உதவி சங்கம் துணைத் தலைவர் ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் சுப்பராமன், உமாபதி, ஆதிநாராயணன், ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் ரத்த அழுத்தம் பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, எடை, உயரம், இ.சி.ஜி‌. கால் பாதம், நரம்பியல், சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும் மருந்துகள் வழங்கப்பட்டது.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    பிரதி ஆங்கில மாதம் கடைசி சனிக்கிழமைகளில் கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம் நடைபெறும் என்று கவுன்சிலர் யு.என். கேசவன் தெரிவித்தார்.

    இதில் 30-வது வார்டு பகுதி சபா குழு உமாபதி, ராமமூர்த்தி ,ஜெகநாதன், ரங்கராஜன், தஞ்சாவூர் ஏன்சியன்ட் சிட்டி லயன்ஸ் சங்கம் தலைவர் பாலகிருஷ்ணன், செயலர் சுந்தர், பொருளர் தமிழவதி, துணைத் தலைவர் துரை பத்மநாபன், சங்க நிர்வாகி ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கோவிந்தராஜு நன்றி கூறினார்.

    Next Story
    ×