என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 294 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்- மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., வழங்கினார்
- விளாத்திகுளம் மற்றும் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- பள்ளியில் மரங்களை வளர்த்து மாணவர்கள் பராமரித்தால் தனது சொந்த நிதியிலிருந்து 1000 வழங்குவதாக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மாணவர்கள் மத்தியில் பேசினார்.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விளாத்திகுளம் பள்ளி மாணவர்களுக்கு 294 விலையில்லா சைக்கிள்களும், சிவஞானபுரம் பள்ளியில் 95 சைக்கிள்களையும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மரங்கள் வளர்ப்பதன் பயன் குறித்து எடுத்துரைத்தார். மரங்கள் நமக்கும் நமது நாட்டிற்கும் மிகப்பெரிய பயனை கொடுத்து வருகிறது படிப்பின் மூலம் வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்களை விட மரங்கள் வைத்து வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்கள் அதிகம்.
எனவே ஒவ்வொருவரும் மரம் வளர்க்க வேண்டும். மேலும் இப்பள்ளியை விட்டு மாணவர்கள் வெளியே செல்வதற்கு முன் ஒரு மரத்தையாவது நட்டு வைத்து செல்ல வேண்டும். அப்படி இப்பள்ளியில் மரங்களை வளர்த்து மாணவர்கள் பராமரித்தால் தனது சொந்த நிதியிலிருந்து 1000 வழங்குவதாக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மாணவர்கள் மத்தியில் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு, விளாத்திகுளம் பள்ளி தலைமை ஆசிரியர் ரோஸ்லின் சாந்தி, சிவஞானபுரம் பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள்
இம்மானுவேல், மகேந்திரன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராஜபாண்டி, வார்டு செயலாளர்கள் ஜெயசங்கர், ஸ்டாலின் கென்னடி, வார்டு கவுன்சிலர் குறிஞ்சி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர், உட்பட ஆசிரிய- ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்