என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி பொருட்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி
- கண்கவர் பொழுது போக்கு அம்சங்களுடன் நடக்கும் பொருட்காட்சி வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது.
- பொருட்காட்சியை பள்ளி மாணவர்கள் இலவசமாக காணும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக இலவச பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் முதல் முறையாக அமெரிக்கன் ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகில் சிவன் கோவில் மைதானத்தில் பிரமாண்டமான லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி கடந்த 23-ந் தேதி முதல் நடந்து வருகிறது.
கண்கவர் பொழுது போக்கு அம்சங்களுடன் நடக்கும் பொருட்காட்சி வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது.
கண்காட்சி மைதான முகப்பில் உள்ள லண்டன் பிரிட்ஜ் பொதுமக்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளது. அதில் பொதுமக்கள் ஏறி செல்பி எடுத்து மகிழ்கின்றனர். துபாயில் உள்ள அல்அராபா லோட்டஸ், ரிப்பன் பில்டிங்க் ஆகியவை வண்ண வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன.
3டி செல்பி புகைப்படங்கள் ஏராளமாக உள்ளன. ஆதிவாசிகள் வாழ்க்கை முறை, இயற்கை அங்காடி, குட்டியை சுமந்தபடி இருக்கும் கங்காரு, பாண்டா கரடி, வரிக்குதிரை, மான்கள், சிங்கம் உள்ளிட்ட வனவிலங்குகள் அழகாக வடிவமைக்கப்பட்டு குழந்தைகளை கவரும வகையில் உள்ளது.
மேலும் பொருட்காட்சியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் விளையாட்டு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பர்னிச்சர், பேன்சி பொருட்கள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
சிறுவர்களுக்கான நீச்சல் குளம், பொருட்காட்சி திடலை சுற்றி வரும் ரெயில், தொங்கும் பாலம், ராட்டினம் போன்ற பொழுது போக்கு விளையாட்டுகளும், டெல்லி அப்பளம், வாழைத்தண்டு சூப், ஜிகர்தண்டா போன்ற சுவையான திண்பண்டங்கள் கடைகளும் பொருட்காட்சி யில் இடம்பெற்றுள்ளன.
பொருட்காட்சி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. நுழைவு கட்டணமாக ரூ.70 செலுத்தி டிக்கெட் பெற்று பொருட்காட்சியை கண்டு ரசிக்கலாம்.
பொருட்காட்சியை பள்ளி மாணவர்கள் இலவசமாக காணும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக இலவச பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பாசை கொண்டு வந்து மாணவர்கள் பொருட் காட்சியை பார்வை யிடலாம் என பொருட்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்