என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
நாசரேத் பொறியியல் கல்லூரியில் இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம்
Byமாலை மலர்7 Nov 2022 1:37 PM IST
- நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
- முகாமில் 350 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர்.
நாசரேத்:
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.கணினி துறை தலைவி பேராசிரியை ஜெமில்டா ஆரம்ப ஜெபம் செய்தார். முகாமில் சுமார் 350 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர். இதில் 70 மாணவ, மாணவி களுக்கு மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் ஜெயக்குமார் ரூபன்,முதல்வர் ஜெயக்குமார், கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஞானசெல்வன், பேராசிரியை ஜெனிபர் கிரேனா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
X