search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில்  இலவச கண் சிகிச்சை முகாம்
    X

    முகாமில் ஒருவருக்கு கண் பரிசோதனை செய்த காட்சி.


    சங்கரன்கோவிலில் இலவச கண் சிகிச்சை முகாம்

    • சங்கரன்கோவிலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • முகாமை சங்கரசுப்பையா தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் வைத்து கிராம உதயம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கரசுப்பையா தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான டாக்டர் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் தன்னார்வ தொண்டர் ஜெயராணி வரவேற்புரை நிகழ்த்தினார்.

    சமூக ஆர்வலரும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான அழகை கண்ணன், மகாத்மா காந்தி சேவா மன்ற தலைவர் மனோகரன், சமூக ஆர்வலர்கள் சங்கரன்கோவில் பரமசிவன், பாட்டத்தூர் பால்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் லிவா தலைமையிலான மருத்துவ குழுவினர் அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை செய்தனர்.

    இதில் 92 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அதில் 58 பேர் இலவச கண் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். கிராம உதயம் களப்பணியாளர் ஜெயராணி நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை கிராம உதயம் மருத்துவதுறையினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×