search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையப்பர் கோவிலில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் - அப்துல் வகாப் எம்.எல்.ஏ. நடத்தி வைத்தார்
    X

    நெல்லையப்பர் கோவிலில் 3 ஜோடிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் எடுத்து கொடுத்து திருமணத்தை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. நடத்தி வைத்த காட்சி. அருகில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் பலர் உள்ளனர்.

    நெல்லையப்பர் கோவிலில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் - அப்துல் வகாப் எம்.எல்.ஏ. நடத்தி வைத்தார்

    • இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கோவில்களில் இன்று 217 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
    • டவுன் தொண்டர் நயினார் கோவிலில் 2 ஜோடி களுக்கும், ஏர்வாடியில் உள்ள திருவாழுதீஸ்வரர் கோவிலில் 2 ஜோடிகளுக்கும் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    நெல்லை:

    இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கோவில்களில் இன்று 217 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.

    நெல்லையப்பர் கோவில்

    நெல்லை டவுன் நெல்லை யப்பர் -ஸ்ரீகாந்திமதி அம்மன் கோவிலில் ஆறுமுக நயினார் சன்னதியில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது .

    இதில் பாளையங் கோட்டை சட்டமன்ற உறுப்பி னர் அப்துல்வகாப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருமணத்தை திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து நடத்தி வைத்தார். பின்னர் ஜோடிகளுக்கு சீர்்வரிசை பொருட்களையும் வழங்கி வாழ்த்தினார்.

    கலந்து கொண்டவர்கள்

    இந்த நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா பிரியதர்ஷிணி, கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, தி.மு.க. பகுதி செயலாளர் கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல டவுன் தொண்டர் நயினார் கோவிலில் 2 ஜோடி களுக்கும், ஏர்வாடியில் உள்ள திருவாழுதீஸ்வரர் கோவிலில் 2 ஜோடிகளுக்கும் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    Next Story
    ×