என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாலப்பட்டி புதூரில் இலவச மருத்துவ முகாம்
- நாமக்கல் மாவட்ட மக்கள் கல்வி நிறுவனம் மற்றும் முள்ளுக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது.
- 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பெர பஞ்சோலை ஊராட்சி பாலப்பட்டி புதூரில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட மக்கள் கல்வி நிறுவனம் மற்றும் முள்ளுக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது .
முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தங்கபழனி பாலுசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி கவுன்சிலர் சித்ரா சரவணன் முன்னிலை வைத்தார். மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் சரவணன் வரவேற்றார். மருத்துவ முகாமில் முள்ளுக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் , சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து உரிய மருந்து, மாத்தி ரைகளை வழங்கினார்கள்.
முகாமில் பொது மக்க ளுக்கு இலவச முழுக்கவசம் வழங்கப்பட்டு பொது மக்களிடையே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டது. முகாமில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் சசிகலா, பரமேஸ்வரி, சுப்பிரமணி உட்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் கல்வி நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.