என் மலர்
உள்ளூர் செய்திகள்

முகாமை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் தொடங்கி வைத்தார்.
இலவச பொது மருத்துவ முகாம்
- பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மற்றும்மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
- திருபுவனம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் வரவேற்றார்.
மெலட்டூர்:
அம்மாபேட்டைஒன்றியம், திருபுவனம் ஊராட்சியில் தஞ்சை விஷ்ணு மருத்துவமனை, வசந்தம் லயன்ஸ் சங்கம் மற்றும் திருபுவனம் ஊராட்சி இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் மாரிமுத்து தலைமை வகித்தார்.
அம்மாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கே.வீ.கலைச்செல்வன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
ஒன்றிய கவுன்சிலர் வெங்கட், சமூக ஆர்வலர், வில்லியம் ஸ்டீபன்சன், குந்தவை நாச்சியார் கல்லூரி கண்காணிப்பாளர் பாலசு ப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
திருபுவனம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் வரவேற்றார்.
முகாமில் தஞ்சை விஷ்ணு மருத்துவமனை, மருத்துவ குழுவினர் சர்க்கரைநோய், ரத்த கொதிப்பு, தைராய்டு, வயிறு சம்மந்தமான பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை, மார்பக நோய் பிரச்சனை, உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மற்றும்மருத்துவ ஆலோசனை வழங்க ப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் விஜய லெட்சுமி,கோகிலம், கிருஷ்ணமூர்த்தி, ஜோதியம்மாள் கலைச்செல்வன் மற்றும் வசந்தம் லயன்சங்க நிர்வாகிகள், கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருபுவனம் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், மற்றும் வசந்தம் லயன்ஸ் சங்கத்தினர் செய்து இருந்தனர்.






