search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரி அருகே சாகுபுரம் வளைவு பாலத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துகள் - தவறுதலாக வைக்கப்பட்ட 'வழிகாட்டி போர்டு' காரணமா?

    • திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் வழியில் நேற்று சாகுபுரம் பாலம் அருகே கார் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
    • குறுகிய வளைவில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் காரணமாக வேக சமன்பாட்டை இழந்து வாகனங்கள் விபத்தை சந்திக்க நேரிடுவதாக கூறப்படுகிறது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலை யில் ஆத்தூரை அடுத்து சாகுபுரம் அருகே முக்கிய வளைவில் அமைந்துள்ள பாலத்தால் அங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி பெரிய பாளை யத்தை சேர்ந்த தொழிலதிபர் ரவி (45) உள்ளிட்ட 9 பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் வழியில் நேற்று சாகுபுரம் பாலம் அருகே கார் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்துள்ளது.

    இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 8 பேர் காயமடைந்தனர். குறிப்பிட்ட இந்த இடத்தில் தொடர்ந்து விபத்துகள் நடப்பதற்கு அங்கு நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி போர்டுதான் காரணம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அந்த இடத்தில் குறுகிய வளைவில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் காரணமாக வேக சமன்பாட்டை இழந்து வாகனங்கள் விபத்தை சந்திக்க நேரிடுவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அங்கே வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி போர்டு வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி நிலைகுலைய செய்வதாக கூறப்படுகிறது.

    சாலையின் நேரே சென்றால் கன்னியா குமரிக்கு செல்லும் பாதை என்றும் இடது புறம் சென்றால் காயல்பட்டினம் பாதை என்றும் வலது புறம் சென்றால் அது குரும்பூர் செல்லும் பாதை என்றும் அந்த வழிகாட்டி போர்டு தெரிவிக்கிறது. ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் அந்த போர்டு தெரிவிக்கும்படி கன்னியாகுமரி செல்லும் நேர்பாதையை தேர்ந்தெடுத்து வேகமாக பயணித்தால் அங்கே உயிர்களை காவு வாங்கு வதற்கு என்று 15 அடி பள்ளம் உள்ளது. எனவேதான் குறிப்பிட்ட அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.

    எனவே நெடுஞ் சாலைத்துறை உடனடி யாக செயல்பட்டு அங்கு தவறுதலாக வைக்கப் பட்டுள்ள வழி காட்டும் போர்டை அகற்றி அதனை சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளி அருகே பொருத்தமான இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் குறுகிய வளைவில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் உள்ள குறைபாடுகளை களையவும் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×