search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் பவுர்ணமி வழிபாடு
    X

    பவுர்ணமி வழிபாடு நடந்தது.

    காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் பவுர்ணமி வழிபாடு

    • ஆவணி மாத பவுர்ணமியில் சித்தர் பீடங்களில் வழிபாடு செய்வதனால் மாங்கல்ய பாக்கியம் அருளும் என்னும் நம்பிக்கை நிலவிவருகிறது.
    • மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த ஜீவ பீடத்தை புனரமைப்பு செய்து பூஜைகள் செய்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் ஆவணி மாத பவுர்ணமி வழிபாடு நடந்தது.

    ஆவணி மாத பவுர்ணமியில் சித்தர் பீடங்களில் வழிபாடு செய்வதனால் மாங்கல்ய பாக்கியமும் (திருமணம்), குடும்பத்தினருக்கு ஆன்ம பலத்தை அருளும் என்னும் நம்பிக்கை நிலவி வருகிறது.

    நாகை அருகே நாகூரில் குயவர் மேட்டு தெருவில் 400 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து இங்கே ஜீவ சமாதி நிலையை அடைந்த ஸ்ரீ காங்கேய சித்தர் மடம் உள்ளது.

    மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த இந்த ஜீவ பீடத்தை ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் புனரமைப்பு செய்து தின, வார, மாதாந்திர பூஜையினை செய்து வருகின்றனர்.

    ஆவணி மாத பவுர்ணமி தினத்தன்று சித்தருக்கு தமிழ் முறைப்படி தேவாரம், திருவாசகம் பாடி வேள்வி செய்து அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது.

    உபயத்தினை சிவா குடும்பத்தினர் செய்தனர்.

    இந்த வேள்வியில் நாகை சத்ரு சம்ஹார மூர்த்தி ஆலய நிர்வாகி சிங்காரவேலு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வேள்வியினை காங்கேய மடத்தின் பூஜகர் வெங்கட்ராமன் மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த ரமேஷ் சிவாச்சாரியார் செய்தனர்.

    நிகழ்ச்சியை காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்தனர்.

    Next Story
    ×